வாழைச்சேனையில் கிளைமோர் ரக வெடிப்பொருள் மீட்பு!
வாழைச்சேனை காவல்துறை பிரிவில் முல்லை வீதி கண்ணகிபுரம் பகுதியில் வீதியோரமாக கிளைமோர் ரக வெடிப்பொருள் ஒன்று இன்று(04) திங்கள் கிழமை மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த வீதியில் மர்மப் பொருள் ஒன்று கிடப்பதாக பொலிசாருக்கு இன்று கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த இடத்திற்கு சென்ற பொலிசார் வெடிப்பொருள் என சந்தேகித்து அதனை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதேவேளை குறித்த காணியினுள் தற்போது கட்டிடம் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை