பருத்தித்துறையில் ஒருவருக்குக் கொரோனா! …

யாழ். வடமராட்சி, பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட புலோலி தெற்கைக் சேர்ந்த நபர் ஒருவர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதையடுத்து பருத்தித்துறை (மந்திகை) ஆதார வைத்தியசாலையின் 07ஆம் இலக்க வார்ட் முடக்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

புலோலி தெற்கைச் சேர்ந்த நபர் ஒருவர் தொண்டை வலி மற்றும் காய்ச்சல் காரணமாக மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு நேற்று சிகிச்சைக்காகச் சென்றுள்ளார்.

ஆண்களுக்கான விடுதியான 07ஆம் இலக்க வார்ட்டில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

அவரிடம் பெறப்பட்ட உயிரியல் மாதிரிகள் இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் சிகிச்சை பெற்று வந்த மந்திகை ஆதார வைத்திசாலையின் 07ஆம் இலக்க வார்ட் முடக்கப்பட்டு மேல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மருதனார்மடம் பொதுச்சந்தை கொத்தணியுடனோ அல்லது வேறு எந்தக் கொரோனாத் தொற்று மூலத்துடனோ தொடர்புபட்டிருக்காத நிலையில் குறித்த தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனால் மேலதிக தடமறியும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்