சாப்பு மற்றும் அலுவலக பணியாளர்கள் தொடர்பான திருத்தச் சட்டமூலம் உள்ளிட்ட நான்கு திருத்தப் பிரேரணைகள் இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.
நாளை குற்றவியல் கோவை திருத்தப் பிரேரணை உள்ளிட்ட மூன்று பிரேரணைகள் மீதான விவாதம் இடம்பெறும். நாளை மறுதினம் புலமைச் சொத்து பிரேரணை மீதான இரண்டாம் வாசிப்புடன் விமான நிலைய வரி உள்ளிட்ட பத்துக் கட்டளைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.
இன்றைய தினமும் எதிர்வரும் வியாழக்கிழமையும் ஆளும் கட்சி சமர்ப்பிக்கும் ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதமும் நாளைய தினம் எதிர்க்கட்சி சமர்ப்பிக்கும் ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதமும் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சி சமர்ப்பிக்கும் நாட்டின் சம கால நிலவரம் பற்றிய ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் காலை 9.30 முதல் ஒரு மணித்தியாலம் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூலக் கேள்விக்கு விடையளிக்க ஒதுக்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை