தோல்விக்கு சுமந்திரனே காரணம் மாவை சேனாதிராஜா பகிரங்க குற்றச்சாட்டு !
கடந்த பாராளுமன்றத் தேர்தலின் தோல்வி மற்றும் அண்மைக்கால தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பின்னடைவுக்கு எம். ஏ. சுமந்திரனே காரணமென கட்சிக்குள்ளும் வெளியிலும் விமர்ச்சிக்கின்றனர்.
அதனை நான் பொது வெளியில் கதைக்கவில்லை கட்சிக்குள்ளேயே கதைத்துள்ளோம் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜா தெரிவித்தார்.
பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவர் வழங்கிய செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளதாவது.
யாழ். மாநகர சபை முதல்வர் தெரிவு மற்றும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் தெரிவு ஆகியவற்றில் கூட்டமைப்பு பெரும் தோல்வியை சந்தித்தது.
கட்சிக்குள் பேச வேண்டிய விடயங்களைத் தொடர்ந்து சுமந்திரன் பகிரங்கமாகப் பேசி வருகிறார்.
இரண்டாவது முறை கட்சித் தலைமைக்கு எதிராக அவர் பகிரங்க அறிக்கை விடுத்துள்ளார். இது மிகவும் பிழையானது.
தன்னிச்சையான, ஜனநாயக விரோத, சட்டவிரோதமான மாவை சேனாதிராஜாவின் செயற்பாட்டினால்தான், யாழ். மாநகர சபையை இழந்தோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எம்.ஏ.சுமந்திரனிடமிருந்து மின்னஞ்சலில் கடிதமொன்று வந்துள்ளது என எனக்குச் சொல்லப்பட்டுள்ளது. இன்னும் அதை நான் படிக்கவில்லை. ஊடகங்கள் தரப்பிலிருந்து விசாரித்ததில் சில உள்ளடக்கங்களை அறிந்துள்ளேன். சுமந்திரனின் ஊதுகுழலாக யாழில் உள்ள ஊடகம் ஒன்று செயற்படுகிறது.
கட்சியின் உள்ளக விடயங்கள், உள்ளுக்குள்ளேயே பேசப்பட வேண்டியவை. அந்த ஒழுக்கத்தை நான் பின்பற்றுகின்றேன். ஆனால், சுமந்திரன் கட்சி தலைமைக்கு எதிராக இரண்டாவது முறையாகப் பகிரங்கமாக அறிக்கை விடுத்துள்ளார். அது தவறானது. இவைகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப் படும் என மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை