இன்றைய வானிலை …

நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் மழை அல்லது இடி யுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டல வியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, வடக்கு,கிழக்கு,வடமத்திய,மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் இவ்வாறு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட் டங்களின் சில பகுதிகளிலும் 100 மில்லிமீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் அந்த அறிக்கை யில் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.