இந்திய வெளிவிவகார அமைச்சரை இன்று சந்திக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (07) நடைபெறவுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தான் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளனர்.

கொழும்பிலுள்ள இந்திய தூதுவரின் அலுவலகத்தில் இன்று காலை இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.