அக்குரணை பகுதி நீரில் மூழ்கியது !

கண்டி மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையினால் மகாவலி கங்கையின் கிளை ஆறு பெருக்கெடுத்துள்ளது.

இதன் காரணமாக கண்டி மாவட்டத்தின் அக்குரணை பகுதி தற்போது நீரில் மூழ்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கண்டியிலிருந்து மாத்தளை நோக்கி பயணிப்போர் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பொல்கொல்ல பகுதியும் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மலையகத்திலுள்ள மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மண்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அனர்த்தங்கள் தொடர்பிலான தகவல்களை அறிவிக்கவும், அறிந்துக்கொள்ளவும் 117 என்ற தொலைபேசி இலக்கம் உள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி கூறுகின்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.