அரசியல் கைதிகள் என எவரும் சிறைகளில் இல்லை – நீதி அமைச்சர்

அரசியல் கைதிகள் என எவருமே சிறைகளில் இல்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (07) வாய்மூல வினாக்கான விடை நேரத்தில் தமிழ் அரசியல் கைதிகள் குறித்து ஆளும் கட்சி உறுப்பினர் சுரேன் ராகவன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே நீதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசியல் கைதிகள் என எவருமே சிறைகளில் இல்லை என்றும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தமிழ் கைதிகள் சிலர் உள்ளனர் என்றும் எனினும் எந்தவித வழக்கும் தொடராது நீண்டகாலமாக இவர்களுக்கு பிணை வழங்காது தடுத்து வைக்கவும் முடியாது என்பதை தான் ஏற்றுக்கொள்கிறேன் எனவும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

எனினும் இவர்களை விடுவிப்பது குறித்து அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும் எனினும் இதுவரையில்  அவ்வாறான தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.