மட்டக்களப்பு ஏறாவூரில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலில் ஏறாவூர் ரயில் நிலையத்து அருகாமைமயில் தண்டவாளத்தில் வேலைக்கு நடந்து சென்ற ஒருவர் ரயிலுடன் மோதி உயிரிழந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (07) பகல் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஏறாவூர் 3 பிரிவு , மகளீர் பாடசாலை வீதியைச்சேர்ந்த 57 வயதுடைய ஜமால்டீன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த ரயில் சம்பவதினமான இன்று பகல் 11.15 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற போது ரயில் தண்டவாளத்தில் வேலைக்கு நடந்து சென்ற ஒருவர் ரயிலுடன் மோதி படுகாயமடைந்த நிலையில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதில் உயிரிழந்தவர் வாய்பேசமுடியாதவர் எனவும். சடலம் பிரோத பரிசோதனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.