அம்பாரை மாவட்டதில் பூரண கர்த்தாலுக்கு அழைப்பு – தவராசா கலையரசன் (பா.உ)

நாவிதன்வெளி பிரதேசத்தில் இடம்பெற்ற அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக இடம்பெற்ற விஷேட பிரார்த்தனையில் கலந்து கொண்ட பின்னர் இக் மேலும்  தெரிவிக்கையில்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுள்ள அரசு தனது அதிகார வெறியினையும் தோல்வி அடைந்துள்ள ராஜபக்சே கம்பனியின் அரசியலை சிங்கள மக்கள் மத்தியில் தக்கவைத்துக் கொள்ளவும் தன்னைச் சூழ்ந்துள்ள சிங்கள இனவாதிகளை குஷிப்படுத்தும் அல்லது குளிர்ச்சி படுத்தவும் இந்த அரசு தமிழ் மக்கள் மீது அவ்வப்போது அதிகார வெற்றியினை பிரயோகப்படுத்தி வருகின்றது.
இறுதி யுத்தத்தில் ஆறாத ரனத்தினையும் பேரிழப்பையும் சந்தித்தது நிற்கும் தமிழர்களை அடிக்கடி சீண்டி, பாதிக்கப்பட்ட சமூகத்தில் உணர்ச்சியில் குளிர் காய்ந்து கொண்டிருப்பது ஒரு வேதனையான ஒன்று.
முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான உறவுகள் மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் என பலர் மடிந்ததன் நினைவாக அவர்களின் உறவுகளால் அமைக்கப்பட்ட நினைவு தூபி இரவோடு இரவாக விசேட அதிரடிப் படையினரை குவித்து வலிகளை சுமந்த மாணவர்களின் கண்முன்னே அகற்றப்பட்டமை வன்மையாக கண்டிக்கத்தக்க விடயமாகும்.

ஒரு இனத்தின் அடையாளம் ,தொன்மை, மொழி , நினைவாலயம் என்பவற்றை அழித்து முள்ளிவாய்க்கால் சம்பவம் இந்த நாட்டில் இடம் பெறவில்லை என்பதை எதிர்கால சமூகத்திற்கு .இலங்கை நாட்டில் தமிழர்கள் இவ்வாறானதொரு இன அழிப்பை சந்திக்க வில்லை என்பதை சுட்டி நிற்கவே நினைவுத் தூபி அழித்தொழிக்கப்பட்டது.

ஒரு நாடு ஒரு சட்டம் என்று உதட்டளவில் பேசிவரும் கோட்டாபாய அரசு தன்னுடைய முகத்தை அரியாசனம் ஏறிய பின்பு காட்டத் தொடங்கியுள்ளது. இந் நாட்டில் சிங்களச் சமூகத்திற்கு ஒரு சட்டமும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சட்டமும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

வயம்பகா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி அமைக்க முடியுமென்றால் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை நினைவு கூர்ந்து உறவுகளால் அமைக்கப்பட்ட நினைவுத்தூபி மாத்திரம் சட்ட விரோதமானது. இராணுவ தளபதி தமக்கும் நினைவு தூபி அகற்றியது தொடர்பாக எவ்வித சம்பந்தமும் இல்லை என்றால் உபவேந்தர் அகற்றியதன் பின்னணி என்ன?

தற்போது நாட்டை ஆண்டு கொண்டிருப்பவர் நந்தசேன எனவும் கோட்டாபாய எனும் பாதுகாப்பு செயலாளர் என இரு முகங்கள் தனக்கு இருப்பதாக அவற்றையும் பார்க்க விரும்பினால் அதைக் காட்டவும் தான் தயார் என கூறியிருக்கின்றார் இது அதிகார வெறிபிடித்த ஒரு அரசின் செயற்பாடு.

இந்த விடயம் இவ்வாறு இருக்க கிழக்கில் அண்மைக்காலமாக பேசு பொருளாக இருக்கும் மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனைப் பண்ணையாளர்கள் அறுவர் கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
போரில் இறந்தவர்களை கூட முடியாத இனவாதத்தை விதைக்கும் அரசாங்கம் எவ்வாறு தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுதர போகின்றது என்பதனை தமிழ் மக்கள் இனியாவது உணர வேண்டும்.

தமிழ் மக்களோடு எப்போதும் துணை நிற்கும் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமே . இவ்வாறான இனவாத அரசுடன் அடிவருடிகளாக நிற்கும் சிலர் அரசின் இனவாத செயற்பாடுகளுக்கு என்ன கூறப்போகின்றனர்.

இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளில் நினைவுதூபி அகற்றப்பட்டதற்கு எதிராக பல அரசியல் தலைவர்களும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாளை 3 தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து வடக்கு கிழக்குத் தாயகப் பகுதிகளில் கடையடைப்புக் கர்த்தாளினை அனுஷ்டிக்க பூரண ஆதரவினைத் தந்துதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

இந்த பிரார்த்தனையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் , காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறில் , இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் துணை செயலாளர் அ. நிதான்சன் உள்ளிட்ட அரசியல் கைதிகளின் உறவினர்களும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.