போராட்டம் நிறைவுக்கு வந்தது ;முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீளமைக்கும் பணிகள் ஆரம்பம்!

யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குனராஜா இன்று அதிகாலை 3.30 மணிக்கு உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்த மாணவர்களுக்கு துணைவேந்தர் முள்ளிவாய்கால் கஞ்சி கொடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தார்

இதே வேளை கடந்த 8ம் திகதி இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீண்டும் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, துணைவேந்தர் தலைமையில் மாணவர்களின் பங்குபற்றலோடு இடம்பெற்றது.

 

குறித்த நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிராக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் கர்த்தால் இன்று அனுஸ்டிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.