தூபியை உடைப்பதானது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்கு விழுந்திருக்கிற அடியாகும்-காரைதீவு பிரதேச சபை தவிசாளர்

(பாறுக் ஷிஹான்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால்  நினைவுத் தூபியை மீள கட்டுவதற்கு  அனுமதி வழங்க வேண்டும் என  காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிறிஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.

அம்பாறை  ஊடக அமையத்தில் நேற்று  (10) இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தனது கருத்தில்

இலங்கைவாழ் தமிழ் மக்கள் அவர்களுடைய சமய சம்பிரதாயங்களை செய்வதற்கு இன்று பல தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த எமது உறவுகளின் நினைவுத் தூபியை உடைத்து இருப்பதானது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்கு விழுந்திருக்கிற அடியாகும். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அரசாங்கம் திட்டமிட்டு சிறுபான்மையினருக்கு எதிராக செயற்படுகின்றது. என்ற சந்தேகம் எழும்பியுள்ளது.  தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களுடைய உரிமைப் போராட்டங்களுக்கு எப்போதும் குரல் கொடுத்து வந்துள்ளது. ஆனால் இன்று அவற்றை செய்ய முடியாதஇ வாய்திறக்க முடியாத அபாயமான சூழலில் பயமாக இருக்கின்றது. பேசினால் கெரோனா என்ற காரணங்களைச் சொல்லி சிறையில் அடைப்பதற்கு தயாராக இருக்கின்றார்கள்.
 (11) வடக்கு கிழக்கு உள்ளிட்ட மலையகம் தென் பிரதேசங்களிலும் வாழுகின்ற முழு சமூகமும் இன வேறுபாடுகளுக்கு அப்பால் சகலரும் ஒன்றிணைந்து கடையடைப்பு செய்து கவனஈர்ப்பு கர்த்தாலுக்கு ஆதரவை வழங்க வேண்டும். இதற்கான அறைகூவலை நான் விடுகின்றேன். நினைவுத்தூபியை மீண்டும் கட்டுவதற்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் உடனடியாக இதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.