அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிற்கு கொரோனா தொற்று உறுதி

அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ரவூப் ஹக்கீமுடன் தொடர்பினை பேணிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர் உட்பட 300 பேரிடம் அன்டியன் பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.