கிளிநொச்சியில் தொடரும் மழை ;குளங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு வெள்ள எச்சரிக்கையும் விடுப்பு !

கிளிநொச்சியில் பெய்து வரும் தொடர் மழையால் குளங்கள் வான் பாய்கிறதுடன், வெள்ள எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 6 மணி வாசிப்பின் பிரகாரம் கிளிநொச்சி நீர்பாசன குளங்கள் மீண்டும் வான் பாய ஆரம்பித்துள்ளதாகவும் வெள்ள முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரணைமடு குளம் 4 வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. 2 கதவுகள் 1 அடியாகவும் ஏனைய இரு கதவுகள் 6 அங்குலமாகவும் திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிக நீர் வருகை காரணமாக இரவு 6 வான் கதவுகள் திறந்து விடப்பட்டதாகவும் அதில் இரண்டு பூட்டப்பட்டுள்தாகவும் குறிப்பிடும் நீர்பாசன திணைக்களம், நீர் வரத்து அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் மேலும் கதவுகள் திறக்கப்படலாம் எனவும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.

இந்த நிலையில் பன்னங்கண்டி, முரசுமோட்டை, ஊரியான், கண்டாவளை, பரந்தன், உமையாள்புரம் உள்ளிட்ட தாழ்வு நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக செயற்படுமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.