சாய்ந்தமருதைச் சேர்ந்த சிப்லி இராணுவ கடேட் படையணியின் லெப்டினென் பதவியிலிருந்து கெப்டனாக பதவியுயர்வு!

( நூருல் ஹுதா உமர்)

சாய்ந்தமருதைச் சேர்ந்த எம்.எஸ்.சிப்லி இராணுவ கடேட் படையணியின் லெப்டினென் பதவியிலிருந்து கெப்டனாக பதவியுயர்வு பெற்றுள்ளார்.

இவரது பதவி உயர்வுக்குரிய வர்த்தமானி அறிவித்தல்  கடந்த 2021.01.08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெளியானது. இவர் பாதுகாப்பு அமைச்சில் 05 வருடங்கள் கடமையாற்றியதுடன் தற்போது முல்லைத்தீவு 34ம் படையணியின் நிறைவேற்று நிர்வாக அதிகாரியாகவும் கடமையாற்றி வருகின்றார்.

இவர் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் ஆங்கில ஆசிரியராகவும், ஒழுக்காற்றுக்கு பொறுப்பான ஆசிரியராகவும் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது. சாய்தமருதைச் சேர்ந்த பிரபல மெளலவி காலஞ்சென்ற அல்-ஹாஜ் ஏ.எஸ்.எம்.சம்சுதீன் அவர்களின் நான்காவது புதல்வராவார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்