காரைதீவு பிரதேச சபை ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி நிதி மற்றும் நிருவாகப் பிரிவுகள் உடனடியாக மூடல் !

அம்பாறை – காரைதீவு பிரதேச சபை ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அங்குள்ள நிதி மற்றும் நிருவாகப் பிரிவுகள் இன்று (11) உடனடியாக மூடப்பட்டன.

பிரதேச சபையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவரின் தந்தைக்கு இரு வாரங்களுக்கு முன் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் வீட்டிள்ள ஏனையோர் தனிமைப்படுத்தப்படுத்தலில் வைக்கப்பட்டு பிசிஆர் சோதனை செய்யப்பட்டபோது அவரது மனைவிக்கும் மகனுக்கும் (ஊழியர்) தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதனையடுத்து இன்று (11) காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறில் மற்றும் 65 ஊழியர்களுக்கும் அன்ரிஜன் சோதனை செய்யப்பட்டது. இருப்பினும் அவர்களுக்கு தொற்று இல்லை எனப் பெறுபேறு கிடைத்தது.

மேலும், காரைதீவு சுகாதாரவைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பசீர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட இச்சோதனையின்போது ஒருவருக்கு தொற் உறுதி செய்யப்பட்டது. இவர் நிதிப் பிரிவில் கடமையாற்றும் நபரவார் என தெரியவருகிறது .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.