பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் தடையின் காரணமாக மாற்று வழிமுறைகளை அறிந்து கொள்வதற்கு நனோ தொழில்நுட்பம்-சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர

எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் தடையின் காரணமாக மாற்று வழிமுறைகளை அறிந்து கொள்வதற்கு நனோ தொழில்நுட்பத்தின் ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் என்று சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர கேட்டுக்கொண்டுள்ளார்.

குறுகிய காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் தடையை அடுத்து, அதற்கு பதிலாக கண்டறியக்கூடிய சுற்றாடலுக்கு பொருத்தமான மாற்று தயாரிப்புக்கள் தொடர்பில் நனோ தொழில்நுட்பம் உதவ வேண்டும் என்று சுற்றாடல் துறை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுற்றாடல்துறை அமைச்சர் கடந்த 8ஆம் திகதி நனோ தொழில்நுட்ப அதிகாரிகளுடன் இதுதொடர்பாக நடத்திய பேச்சு வார்த்தையின் போது இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்பொழுது ஏற்றுமதி செய்யப்படும் எரிபொருள் வகைகளில் பெரும்பாலானவை மூலப்பொருளாகவே எற்றுமதி செய்யப்படுகின்றன.

இருப்பினும், பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்தி என்ற ரீதியிலோ அல்லது முழுமையாக தயாரிக்கப்பட்ட பொருட்களாகவோ ஏற்றுமதி செய்யப்படுமாயின், தற்பொழுதிலும் பார்க்க பெருந்தொகை வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

நாம் மூலப்பொருள் என்ற ரீதியில், பெறுமதி சேர்க்கப்பட்ட பொருள் என்ற ரீதியில் அல்லது முழுமைப்படுத்தப்பட்ட பொருட்கள் என்ற ரீதியில் ஏற்றுமதியின் மூலம் கூடுதலான விலைக்கு கொள்வனவு செய்ய வேண்டியிருப்பதாக அமைச்சர் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.