கிளிநொச்சி – கிருஷ்ணபுரம் தனிமைப்படுத்தல் மையத்தில் வழங்கப்பட்ட உணவில் புழு!
கிளிநொச்சி – கிருஷ்ணபுரம் தனிமைப்படுத்தல் மையத்தில் இன்று (திங்கட்கிழமை) மதியம் வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் காணப்படுள்ளதாக அங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
உணவுகள் பார்சல் மூலம் வழங்கப்படுவதாகவும் அதனை கதிரை ஒன்றில் வைத்துவிட்டு சென்று விட்டார்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதுதொடர்பாக தனிமைப்படுத்தல் நிலைய பொறுப்பதிகாரிகளிடம் தெரிவிக்க முற்பட்ட போதும் கருத்திலெடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பில் வவுனியா வடக்கு சுகாதார சேவைகள் பணிமனைக்கு தெரியப்படுத்தியுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.
கருத்துக்களேதுமில்லை