வடக்கில் நேற்று மட்டும் 55 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி!

வடக்கு மாகாணத்தில் நேற்று 55 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 427 பேருக்கு நேற்று பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டது. இதில் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 27 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த இருவருக்கும், யாழ். மாவட்டம் – உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் என 31 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில்  313 பேருக்கு நேற்று பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டது. இதில் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 24 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.