யாழில் 149.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு

யாழில் 149.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்தார்

யாழ் மாவட்டத்தில் நேற்று காலையிலிருந்து தற்போது வரை யாழில் 149.3மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

மேலும் 24 மணித்தியாலத்திற்கு இந்த மழையுடன் கூடிய காலநிலை தொடரும் எனவும் வடபகுதியில் 100மில்லி மீற்றர் மழை எதிர்பார்க்கப்படுகிறது. காற்று 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவித்தார்.

குறித்த மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதோடு தாழ்நிலப் பகுதிகளில் உள்ளவர்கள் அவதானமாக இருக்குமாறும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்