நாட்டில் 569 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் ,உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 240 ஆக உயர்வு!

நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் மொத்தமாக 569 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில்  564 பேர் பேலியகொட – மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

ஏனைய நால்வர் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்பதுடன் ஒருவர் வெளிநாட்டிலிலிருந்து வருகை தந்தவரும் ஆவார்.

இதனால் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 48,949 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு ‍தெரிவித்துள்ளது.

இதேவேளை பேலியகொட – மினுவாங்கொடை கொரோனா கொத்தணிப் பரவலில் சிக்கிய மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 45,186 ஆக பதிவாகியுள்ளது.

இது இவ்வாறிருக்க நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 766 நோயாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். அதன் காரணமா குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 42,091 ஆக உயர்வடைந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 6,618 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 625 பேர் தொடர்ந்தும் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளனர்.

இதேவேளை கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் எட்டு நோயாளர்கள் உயிரிழந்திருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்றிரவு உறுதிப்படுத்தினார்.

அதனால் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் நாட்டில் 240 ஆக உயர்வடைந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.