தேர்ஸ்டன் கல்லூரியின் பழைமையான கட்டடம் மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது

கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியின் 71ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, புனரமைக்கப்பட்ட கல்லூரியின் பழைமையான கட்டடம்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.

பாதுகாப்பற்ற நிலையில் பழுதடைந்திருந்திருந்த கட்டடம் பாதுகாப்பு அமைச்சின் தலையீட்டுடன் இலங்கை கடற்படையினரால் புனரமைக்கப்பட்டது.

அதற்கான உபகரணங்கள் மற்றும் பொருட்கள் கொள்வனவிற்காக மாத்திரம் தேர்ஸ்டன் கல்லூரியின் பாடசாலை அபிவிருத்தி சங்கம் 13 மில்லியன் ரூபாயினை செலவிட்டுள்ளது.

மஹா சங்கத்தினரது பிரித் பாராயணத்திற்கு மத்தியில் கட்டடத்தை மாணவர்களின் பாவனைக்காக கையளிப்பதற்கான நினைவு பலகையை திறந்துவைத்த கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், நாடாவை வெட்டி கட்டடத்தை திறந்து வைத்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தேர்ஸ்டன் கல்லூரியின் கீர்த்திமிக்க பழைய மாணவராவார்.

71 ஆண்டுகால தேர்ஸ்டன் கல்லூரியின் வரலாற்றில் தொழில் ரீதியாக 50 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையை நிறைவுசெய்த கீர்த்திமிக்க பழைய மாணவரொருவருக்கு வழங்கப்படும் தேர்ஸ்டன் சமூக நினைவு பரிசு இதன்போது தேர்ஸ்டன் கல்லூரியின் அதிபர் பிரமுதித விக்ரமசிங்க மற்றும் மாணவத்தலைவர் ஆகியோரினால்  பிரதமருக்கு வழங்கப்பட்டது.

அமைச்சர்களான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பந்துல குணவர்தன மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் கீ ஷென்ஹொங் ஆகியோருக்கு  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நினைவு பரிசுகள் வழங்கிவைக்கப்பட்டன.

சீன பாதுகாப்பு கல்லூரியின் இலங்கை பழைய மாணவர்கள் சங்கம் மற்றும் சீன குடியரசின் ஒருங்கிணைப்புடன் Huawei Idea hub இனால் வழங்கப்பட்ட 10 மில்லியன் ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட் வகுப்பறைக்கான 06 தொழில்நுட்ப உபகரண தொகுதிகள் கையளிப்பும் இதன்போது இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில்  அமைச்சர்களான ஜி.எல்.பீரிஸ், பந்துல குணவர்தன, இலங்கைக்கான சீன தூதுவர் கீ ஷென்ஹொங், பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, சுங்க பணிப்பாளர் நாயகம் ஜீ.வி.ரவிப்பிரிய, அதிபர் பிரமுதித விக்ரமசிங்க உள்ளிட்ட தேர்ஸ்டன் கல்லூரியின் பணியாளர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.