பொலிஸ் அதிகாரிகளாக மாறவுள்ள 150 சட்டத்தரணிகள்

பொலிஸ் நிலையங்களில் 150 சட்டத்தரணிகளை தலைமை இன்ஸ்பெக்டர்களாக (CI) நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு  சட்ட ஆலோசனை மற்றும் சேவைகயை மிகவும் திறமையான முறையில் முன்னெடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டவுடன்  ஒன்பது மாகாணங்களை உள்ளடக்கிய பொலிஸ் நிலையங்களுக்கு குறித்த சட்டத்தரணிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சு  அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்