பெரும்போக அறுவடை நெல்லை கொள்வனவு செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பம்

பெரும்போக அறுவடை நெல்லைக் கொள்வனவு செய்வதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது.

நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் 3 இலட்சம் மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்படும். இந்தப் பணிகள் கமநல உதவி ஆணையாளர்கள், நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிரதேச முகாமையாளர்கள் ஆகியோர்களது நேரடிக் கண்காணிப்பில் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும்.

கூடுதல் நெல்லைக் கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தி வைப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும். நெல் கொள்வனவு வேலைத்திட்டம் இன்று அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.