ஓட்டமாவடி-பாடசாலைகளின் செயற்பாடுகளை கண்காணிக்க அதிகாரிகள் விஜயம்

பாடசாலைகளில் இவ்வருடத்திற்கான  கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் அதன் செயற்பாடுகளை கண்காணிக்க அதிகாரிகள் பாடசாலைகளுக்கு விஜயத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

பாடசாலைகளுக்கு விஜயங்களை மேற்கொள்ளும் அதிகாரிகள் கற்றல் செயற்பாடுகளை அவதானித்து வருவதுடன் பாடசாலைகளின் குறைபாடுகளையும் கேட்டு வருவதாகவும் அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்தவகையில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தின் கீழுள்ள பாடசாலைக்கு மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர் அவர்கள்நேற்று   (12) குறித்த பிரதேச பாடசாலைகளுக்கு விஜயம் செய்து பாடசாலை செயற்பாடுகளை அவதானித்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்