மட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரி மாணவர்கள்9 பேர் உட்பட 12 பேருக்கு கொரோனா!

மட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரி மாணவர்கள் 9 பேர் உட்பட 12 பேருக்கு கொரோனா தொற்றுறுதி இன்று (13) அதிகாலை வெளியான பி.சி.ஆர் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மாவட்டத்தில் தொடர்ந்து மேற்கொண்டு வரும் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தாதியர் பயிற்சி கல்லூரி மாணவர்களுக்கும் மற்றும் ஏனையோருக்கும் செய்யப்பட்ட 132 பி.சி.ஆர் பரிசோதனையில் தாதியர் பயிற்சி கல்லூரி மாணவர்கள் 9 பேருக்கும் வெல்லாவெளி சுகாதார பிரிவில் 3 பேர் உட்பட 12 பேருக்கு தொற்றுறுதி கண்டறியப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.