மட்டக்களப்பில் வீடுகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு

01 13

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் சௌபாக்கியா விசேட விடமைப்புத் திட்டத்தின் கீழ் பூரணப்படுத்தப்பட்ட வீடுகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வுகள் மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி சௌபாக்கிய விசேட வீடமைப்புத் திட்டத்தின் மூலம் கட்டடப்பட்ட வீடுகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வி.தவராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ், சமுர்த்தி சமுக உத்தியோகத்தர் எம்.எம்.எம்.சாஜகான், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எம்.என்.சியாத், ஏ.எல்.எம்.நியாஸ், கிராம சேவை அதிகாரிகள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காகிதநகர் பகுதியில் நான்கு வீடுகளும், மாஞ்சோலை பிரதேசத்தில் மூன்று வீடுகளுமாக ஏழு வீடுகள் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் இரண்டு இலட்சம் ரூபாய் நிதி உதவியும், மக்களின் இரண்டு இலட்சம் ரூபாய் பங்களிப்பு மூலம் நிர்மானிக்கப்பட்ட வீடுகள் மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டதாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வி.தவராஜா தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.