யாழ். மாநகர சபை எல்லைக்குள் புதிய முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைக்க தீர்மானம் நிறைவேற்றம்!

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் புதிய முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைத்தல் உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் இன்றைய சபை அமர்பில் நிறைவேற்றப்பட்டுள்ளன. யாழ். மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான முதலாவது அமர்வு இன்று (13) மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் தற்போது இடம்பெற்றது.

இதன்போது கடந்த 8ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்டமையை கண்டித்து மூன்று கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்டமையை கண்டித்து சபை அமர்வு ஐந்து நிமிடங்கள் ஒத்திவைத்தல், யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இராணுவம் மற்றும் பொலிஸார் உள்நுழைந்தமையை கண்டித்தல் மற்றும் மாநகர சபை எல்லைக்குள் புதிய முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைத்தல் ஆகிய மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.