கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 646பேர் குணமடைவு
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 646 நோயாளர்கள் பூரண குணமடைந்து இன்று (13) வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதற்கமைய, கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 43,267 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 244 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.













கருத்துக்களேதுமில்லை