கிளிநொச்சி அக்கராயன்குளத்தின் அண்மித்த பகுதிகளில் உள்ள வயல் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கின ! விவசாயிகள் கவலை

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பாரிய நீர்ப்பாசன குளமான அக்கராயன் குளத்தில் நீர் மட்டம் அதிகரித்தனால் தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கி காணப்படுகின்றன.

குறிப்பாக அக்கராயன் குளத்தில் ஆற்றுப் படுகைகளை அண்மித்த பகுதிகளில் உள்ள சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கி காணப்படுகின்றன
இதே வேளை அக்கராயன்குளத்தின் கீழான பெரும் போக நெற்செய்கையின் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் நோய்த்தாக்கம் மற்றும் அறுவடையின் போதான தொடர்மழை என்பவற்றினால் விவசாயிகள் பெரிதும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.

இதனால் கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள பாரிய நீரப்பாசனக்குளமான அக்கராயன் குளத்தின் கீழ் உள்ள 3417 ஏக்கர் நிலப்பரப்பில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தற்போது நெல்அறுவடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தற்போதைய தொடர் மழை காரணமாக அறுவடைகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக, அறுவடை செய்யும் நெல்லை உரிய விலைகளில் விற்பனை செய்யவோ அல்லது உலரவிட்டு களஞ்சியப்படுத்தவோ முடியாத நிலையில் குறைந்த விலைகளில் நெல்லை விற்பனை செய்யவேண்டியுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.