மன்னார்-திருக்கேதீஸ்வர ஆலயத்தில் விசேட பொங்கல் நிகழ்வு

தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று (14) காலை வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் பொங்கல் பொங்கப்பட்டு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

ஆலய பிரதம குரு கருணாநந்த குருக்கள் தலைமையில் பொங்கல் விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் சுகாதார வழிமுறைகளுடன் இம்முறை ஆலயத்தில் தைப்பொங்கல் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்