கல்முனை கடற்கரை பள்ளிவாசலில் 199வது கொடியேற்றம்

கல்முனை மாநகர மக்களால் நடாத்தப்படும் 199வது வருட புனித கொடியேற்ற விழா நேற்று   (14) வியாழன்  மாலை கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹாவில் இடைபெற்றது.

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் தலைவர் டாக்டர் அல்ஹாஜ் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தலைமையில்  இடம்பெற்றது

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாயலில் இருந்து  கொடியானது  கொண்டு வரப்பட்டு கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா மினாராக்களில் ஏற்றி வைக்கப்பட்டது.

கொரோனா  தொற்று காரணமாக இம் முறை கொடியேற்றமானது
மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையானோர் கலந்து கொண்டதுடன் சுகாதார நடைமுறைகளை  பின்பற்றி  கொடியேற்றம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நசீர் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.நிசார்  ,நிர்வாக சபை  உறுப்பினர்கள் சுகாதார பிரிவினர்   ஆகியோர்  கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.