ராஜகிாிய பிரதேசத்தில் ஏற்பட்ட மண் சரிவில் இருவர் உயிரிழப்பு
ராஜகிரிய – கலபலுவாவ – அக்கொன வீதியில் கட்டடமொன்றின் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இடத்திற்கு அண்மையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
இதன்படி ,நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டு வந்த இருவரே இன்று (17) காலை இடம்பெற்ற அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
மேலும் ,இதில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், மற்றையவரின் சடலத்தை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கருத்துக்களேதுமில்லை