யாழில் எம்.ஜி.ஆரின் 104 வது பிறந்தநாளை எழுச்சியாக கொண்டாடிய யாழ் எம்.ஜி.ஆர்!!

(தங்கராசா ஷாமிலன்)
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனின் நூற்றுநான்காவது பிறந்த தினம்  இன்று (17-01-2021)  ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 க்கு  யாழ்ப்பாணம்  கல்வியங்காடு  செங்குந்தா பொதுச்சந்தை வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் உருவச்சிலைக்கு  மாலை அணிவித்தும் தீப ஆராதனை காட்டப்பட்டும் மரியாதை செலுத்தி கொண்டாடப்பட்டது.
யாழ் எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் பகுதியை சேர்ந்த எம்.ஜி ஆரின் தீவிர இரசிகனான சுந்தரலிங்கத்தின் ஏற்பாட்டில்  இடம்பெற்ற குறித்த  நிகழ்வில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் தமிழ்தேசிய மக்கள் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே சிவாஜிலிங்கம் , வலி -கிழக்கு பிரதேசசபை உறுப்பினர் ராசேந்திரம் செல்வராஜா, கோப்பாய் சுந்தரலிங்கம் குடும்பத்தினர் மற்றும் கல்வியங்காட்டு சமூகத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, எம்.ஜி.ஆர்.  பிறந்தநாள்  இனிப்பு பண்டங்கள் எம்.ஜி.ஆர். இரசிகர்களுக்கு பரிமாறப்பட்டு கொண்டாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.