உளுந்தின் விலை 2 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பு

நாட்டில் உளுந்து இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டதையடுத்து, சந்தையில் உளுந்தின் விலை அதிகரித்துள்ளது.

உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்கும் நோக்கில், கடந்த வருடம் பல பொருட்களுக்கு அரசாங்கத்தினால் இறக்குமதித் தடை விதிக்கப்பட்டது. இதனடிப்படையில், உளுந்து இறக்குமதிக்கும் கடந்த யூன் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், நாட்டின் உளுந்து விலை அதிகரித்துள்ளதுடன், உளுந்திற்கு பாரிய தட்டுப்பாடும் நிலவுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட காலப்பகுதியில் 300 ரூபாவாகக் காணப்பட்ட ஒரு கிலோ உளுந்து, தற்போது சுமார் 2,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.