வவுனியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்டெடுப்பு.

வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சடலம் ஒன்று இருப்பதை அவதானித்த சிலர் இன்று (19) அதிகாலை பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

குறித்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஆ.யேசுதாசன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

குறித்த மரணம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்