வலம்புரி சங்குடன் 06 பேர் கைது
வலம்புரி சங்கு ஒன்றை 20 மில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயற்சித்த 06 பேர் அம்பலன்தோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிபொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை