ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வது குறித்து சபாநாயகரின் நிலைப்பாடு எதிர்வரும் 3 வார காலத்திற்குள்

நீதிமன்றத்தை அவமதித்ததான குற்றச்சாட்டில் குற்றவாளியாக சிறைத் தண்டணை விதிக்கப்பட்டுள்ள திரு.ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்க முடியுமா? அல்லது முடியாதா? என்பது தொடர்பிலான தீர்மானத்தை 3 வார காலத்திற்குள் தாம் அறிவிப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேரவர்தன  நேற்று (19)பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே சபநாயகர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்

திரு. ரஞ்சன் ராமநாயக்கா தொடர்பில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முறையான சட்ட ஆலோசனையைப் பெற்று தமது தீர்மானத்தை அறிவிப்பதாகவும், இது தொடர்பில் எந்வொரு உறுப்பினரும் ஏதேனும் தெரிவிக்க விரும்பினால் 2 வாரத்திற்குள் அதனை கடிதம் மூலம் தமக்கு சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில்  அறிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்