முன்னர் அல்லைப்பிட்டி பிரதேசத்தில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த ஒருவர் அண்மையில் இந்திய கடலோர காவற்படையால் கைதுசெய்யப்பட்டதை அடுத்து இப்பகுதியின் கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு கடற்படையினர் பல கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும், குறிப்பாக யுத்த காலங்களில் நடைமுறையில் இருந்த பாஸ் நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என அப்பிரதேச கடற்படை அதிகாரியால் தொழிலாளர்களுக்கு இடைஞ்சல் கொடுக்கப்பட்டுவந்ததாகவும் தெரிவித்து குறித்த பகுதி தொழிலாளர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.
இந்நிலையில் கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் அவதானத்தில் கொண்ட அமைச்சர் குறித்த பிரதேச கடற்படை அதிகாரிகளுடன் விடயம் தொடர்பில் ஆராய்ந்ததுடன் அவ்வாறான நடைமுறைகளை உடனடியாக இல்லாது செய்து அல்லைப்பிட்டி கடற்றொழிலாளர்களது பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை