ரஞ்சனுக்கு நீதி வேண்டி கறுப்பு சால்வையுடன் வந்தார் ஹரீன்..
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறப்பினர் ஹரீன் பெர்ணான்டோ, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறையில் அடைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (20), கருப்புச் சால்வையொன்றுடன் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருந்தார்.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதி கிடைக்கும் வரை, பாராளுமன்றத்துக்கும் வரும் அனைத்து நாள்களிலும் தான் கருப்பு சால்வை அணிந்தே வருகை தரவுள்ளதாக, இதன்போது அவர் தெரிவித்துள்ளார்.
மோசடிகளை அம்பலப்படுத்தியதற்காகவும் பாராளுமன்றத்தில் உண்மை பேசியதற்குமே, ரஞ்சன் சிறையில் அடைக்கப்பட்டார் என்றும் அவருக்கு வழங்கிய தண்டனை நியாயமற்றது என்பதால், அவருக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் என்றும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை