அம்பாறை மாவட்ட கட்டடங்கள் திணைக்களத்தின் பிரதம பொறியியலாளராக அச்சுதன் கடமையேற்பு!

(நூருல் ஹுதா உமர்)

அம்பாறை மாவட்ட கட்டடங்கள் திணைக்களத்தின் மாவட்ட பிரதம பொறியியலாளராக நியமிக்கப்பட்ட பி.அச்சுதன் வெள்ளிக்கிழமை (15) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் மாகாண பொறியியலாளராக கடமையாற்றி வந்த நிலையிலேயே, இவர் கல்முனையிலுள்ள அம்பாறை மாவட்ட கட்டடங்கள் திணைக்கள காரியாலயத்திற்கு இடமாற்றப் பட்டிருக்கிறார்.

பொறியியல் சேவையில் சுமார் 12 வருட கால அனுபவத்தைக் கொண்ட பட்டயப் பொறியியலாளரான இவர் மட்டக்களப்பு மாநகர சபையின் பொறியியலாளராகவும் அம்பாறை மாவட்ட கட்டடங்கள் திணைக்களத்தின் மாவட்ட நிறைவேற்று பொறியியலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

அம்பாறை மாவட்ட கட்டடங்கள் திணைக்களத்தின் மாவட்ட பிரதம பொறியியலாளராக கடமையாற்றிய ஏ.எம்.சாஹிர் வருடாந்த இடமாற்றம் பெற்று கல்முனை கல்வி மாவட்ட பணிமனையின் பொறியியலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்