தேங்காய் திருடிய நபர்; 2 இலட்சம் ரூபாய் பிணையில் விடுதலை!
காலி ரயில்வே நிலையத்துடன் இணைக்கப்பட்ட உத்தியோகப்பூர்வ வீடொன்றில் வளாகத்தில் இருந்து, தேங்காய் திருடிய நபர், 2 இலட்சம் ரூபாய் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர், 21 தேங்காய்களைத் திருடியிருந்தார் என்றும் இவர் கைது செய்யப்பட்டு, காலி நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (20) ஆஜர் செய்யப்பட்டபோதே, இவருக்கு 200,000 ரூபாய் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
இது தொடர்புடைய வழக்கு, மே மாதம் 4ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை