மட்டக்களப்பு – அரசடி கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தல் பகுதியாக அறிவிப்பு

மட்டக்களப்பு – அரசடி கிராம உத்தியோகத்தர் பிரிவு இன்று (21) மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 165 காத்தான்குடி கிராம உத்தியோகத்தர் பிரிவு 3, 165 A காத்தான்குடி மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு , 165 B காத்தான்குடி கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, 166 காத்தான்குடி கிராம உத்தியோகத்தர் பிரிவு 2, 166 A காத்தான்குடி வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகியன இன்று (21) மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

167 A காத்தான்குடி வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, 167 B காத்தான்குடி கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, 167 D புதிய காத்தான்குடி மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய பகுதிகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், பண்டாரகம – அட்டலுகம, மொனராகலை – படல்கும்புற ஆகிய பகுதிகளும் இன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

மேலும், பண்டாரகம மற்றும் அட்டலுகம பகுதிகளில் 660 A எப்பிடமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவும், 659 B பமுனுமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, மொனராகலை – படல்கும்புற பகுதியில் அலுபொத்த கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.