முச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனத்தினால் 3 வாகனங்கள் சேதம் – இருவர் காயம்

(பாறுக் ஷிஹான்)

முச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனத்தினால் ஏற்பட்ட விபத்தில் வீதியில் சென்ற  3 வாகனங்கள் சேதமடைந்ததுடன் இருவர்  காயமடைந்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் கட்டையடி பகுதியில் வெள்ளிக்கிழமை(22) இரவு இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றது.

குறித்த விபத்தின் போது பிரதான வீதியால் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டி கார் என்பவற்றை குறுக்கு வீதி ஒன்றின் ஊடாக பயணம் செய்த  முச்சக்கரவண்டி பிரதான வீதியினை குறுக்கறுக்கும் போது  மோதி சேதப்படுத்தியது.

இவ்விபத்தில் குறித்த  முச்சக்கரவண்டியின்  சாரதி  பிரதான வீதியால் வந்த மோட்டார் சைக்கிள் செலுத்தி சென்ற இளைஞனும் காயமடைந்துள்ளனர்.அத்துடன் பிரதான வீதியினால் சென்ற மற்றுமொரு முச்சக்கரவண்டி மற்றும் கார் என்பன பகுதி அளவில் சேதமடைந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த இராணுவத்தினர் கல்முனை போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்