நடு வீதியில் முளைக்கத் தொடங்கியுள்ள முருங்கை மரம்: மக்கள் விசனம்!
(எச்.எம்.எம்.பர்ஸான்)
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட ஓட்டமாவடி – 3 ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள பௌசி மாவத்தை வீதி இடிந்த நிலையில் இரண்டு வருடங்களாக எவ்வித திருத்தல் நடவடிக்கைகளும் இல்லாத நிலையில் காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ் வீதி வழியே பயணிப்போர் இரவு நேரங்களில் தவறி விழுவதாகவும், அவ்வாறான விபத்தை தவிர்ப்பதற்காக சேதமடைந்த வீதியை பயணிகள் அடையாளம் கண்டு கொள்வதற்காக மரக்கிளைகளை தரையில் குத்திவைப்பதாகவும், இவ்வாறு இறுதியாக குத்தி வைத்த முருங்கை கிளையொன்று தற்போது தலைத்து முளையிடத் தொடங்கியிருப்பதாகவும் பிரதேச மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இவ் வீதியால் நாளாந்தம் பயணிக்கும் அதிகாரிகள் இதனைக் கண்டு கொள்வதில்லை என்று பிரதேச மக்கள் தெரிவிப்பதோடு, இதனை பல மாதங்களுக்கு முன்னர் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் பார்வையிட்டுச் சென்றும் இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை எனவும் பிரதேச மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
கருத்துக்களேதுமில்லை