யாழ். கந்தரோடையில் வற்றாக்கை அம்மன் கோயில் ;இராணுவம் எனக்கூறி காணி விசாரிப்பு- மக்கள் குழப்பத்தில்!
யாழ்ப்பாணம், சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோயில் புராதன தீர்த்தக் கேணியை அண்டியுள்ள அரச மரம் தொடர்பாக இராணுத்தினர் எனக் கூறி விசாரித்ததால் அங்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
குறித்த கோயிலுக்கு நேற்று (22) மாலை ஐந்து மணியளவில் சென்றிருந்த சிலர், பூசகரிடம் தம்மை காரைநகர் முகாமைச் சேர்ந்த படையினர் என அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அத்துடன், கோயிலுக்குச் சொந்தமான தீர்த்தக் கேணியை அண்டியுள்ள அரச மரம் உள்ள நிலப்பகுதி தொடர்பாக கேட்டறிந்துள்ளனர். அந்தக் கேணி, அரச மரம் உள்ள நிலப்பகுதி யாருக்குச் சொந்மானது என பூசகரிடம் வினவியுள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பாக பூசகரால் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனுக்கு இன்று காலை தகவல் வழங்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற சித்தார்த்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடினர்.
கந்தோரடையில் தொல்பொருள் திணைக்கத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இந்து ஆலயத்தை சிங்களம் பேசும் நபர்கள் வந்து விசாரத்தமை ஊர் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துக்களேதுமில்லை