11ஆவது விமானம் உக்ரைன் சுற்றுலா பயணிகளுடன் இலங்கை வருகை

உக்ரைன் சுற்றுலா பயணிகளுடனான 11ஆவது விமானம் இலங்கை வந்தடைந்தது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைக்கும் வேலைத்திட்டத்தின் ஊடாக இவர்கள் உக்ரைன் ஸ்கயிப் அப் விமான சேவைக்கு உட்பட்ட Pஞ 555 இலக்க விமானம் மூலம் இன்று அதிகாலை இந்த சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்தனர்.

மத்தளை சர்வதேச விமான நிலையத்திற்கு வருகைத்தந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 104 ஆகும். இதேவேளை நாட்டுக்கு வருகை தந்திருந்த 148 உக்ரைன் சுற்றலா பயணிகள் இந்த விமானத்தின் மூலம் தாய் நாட்டுக்கு பயணமானார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்