திருகோணமலை துறைமுகத்திற்கு சீமேந்து ஏற்றி சென்ற கப்பல் விபத்து
திருகோணமலைக்கு அருகில் உள்ள சின்ன இராவணா கோட்டை கடற்பரப்பில் லைபீரியா கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள கப்பல் ஒன்று விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை துறைமுகத்திற்கு சீமேந்து ஏற்றி வந்த சந்தர்ப்பத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த கப்பலுக்கு உதவுவதற்காக இரண்டு கடற்படை கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்
கருத்துக்களேதுமில்லை