பவித்ராவின் கணவருக்கும் கொரோனா! – மூடப்பட்டது அலுவலகம்

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் கணவர் காஞ்சன ஜெயரத்னவுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவருடன் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த அதிகாரிகள் நேற்று மாலை முதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்தநிலையில், ஏற்கனவே தொற்றுக்கு உள்ளான அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு சிகிச்சைக்காக நேற்று மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, சுகாதார அமைச்சக வளாகத்தில் உள்ள அவரது அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்