திருகோணமலை-விவசாய நிலங்களுக்கான நீர்பாய்ச்சும் முறைமையை துரிதப்படுத்த விவசாயிகள் கோரிக்கை
(ஹஸ்பர் ஏ ஹலீம்)
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பீங்கான் உடைந்தாறு, வன்னியனார் மடு, புளியடிக்குடா போன்ற விவசாயப் பகுதிகளுக்கு தீர்ப்பாய்ச்சும் பிரதான ஆற்றை மறித்து சுமார் 2000 ஏக்கர் வயல் நிலங்களுக்கு நீரைக் கொண்டு செல்வதற்காக இந்த நவீன காலத்திலும் கஷ்டப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். பல முறை விவசாய செய்கையின் போது பல கஷ்டங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்கள்.
இந்த இடத்தில் ரெகுலேட்டர்களை இனிமேலாவது அமைத்துத் தரமாட்டார்களா எனவும் விவசாயிகள் ஏங்குகிறார்கள். இது குறித்து உரிய அதிகாரிகள் கவனம் எடுத்து தீர்க்கமான முடிவுகளை பெற்றுத் தருமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்கள்
கருத்துக்களேதுமில்லை